உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கனகபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய ரீதியான பொங்கல் நிகழ்வுகளும் பண்பாட்டு திருப்பலியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.