இலங்கை திருஅவையில் கூட்டெருங்கியக்க பயணம் எனும் கருப்பொருளில் இலங்கை ஆயர்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட இறுதி ஆவண தயாரிப்புக்கான ஒன்றுகூடல் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அக்குவாய்னஸ் கல்லூரியின் கருதினால் கூரே கோட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்தோனி ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதி பேரருட்தந்தை பிறையன் உடக்குவே அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர்கள் தெரிவுசெய்யப்பட்ட குருக்கள் பங்குபற்றியதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் அவருடன் இணைந்து இரண்டு பொதுநிலை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

By admin