யாழ். மறைமாவட்டதின் யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த யூபிலி சிலுவை கடந்த 12ஆம் திகதி அங்கிருந்து மங்குளம் பங்கிலுள்ள மறைமாவட்ட யாத்திரை தலமான புனித அக்னெஸ் அம்மா ஆலயத்திற்கு குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் எடுத்துச்செல்லப்பட்டு பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
ஆலய முன்றலிலிருந்து யூபிலி சிலுவை சிறார்களின் நடனத்தோடு ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்ட்ட இடத்தில் மக்களின் ஆராதனைக்காக வைக்கப்பட்டது.
மறைமாவட்டத்தின் யாத்திரைத்தலமான மாங்குளம் புனித அக்னெஸ் அம்மா ஆலய திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் அன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவருவதுடன் திருவிழா திருப்பலி 21ஆம் திகதி வருகின்ற செவ்வாய்க்கிழழை யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நாட்டிகளில் யூபிலி சிலுவை அங்கு வைக்கப்பட்டிருக்கும்.