கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிலுள்ள மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அக்கராயன், உருத்திரபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி, ஆகிய பங்குகளை சேர்ந்த 110 மேற்பட்ட அங்கத்தவர்களும், ஆன்ம இயக்குனர்களும் பங்குபற்றியிருந்தனர்.