நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா வருகின்ற 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதென பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாலயத்தை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆசீர்வதித்து திறந்து வைப்பாரெனவும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து புனித செபஸ்ரியாரின் ஆசீரை பெற்றுக்கொள்ளும் படியும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

By admin