யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.