அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரி சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது.
வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி ஆறு நாட்களாக இடம்பெற்ற இப்போராட்டம் ஏழாவது நாளாக யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை மங்களராஜா, அகில இலங்கை இந்து மகா மன்ற உப தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், யாழ். மாநகர சபை முன்னாள் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். பல்கலைக்கழக கலைத்துறைப் பீடாதிபதி திரு. றகுறாம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன். ஜங்கரநேசன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. முருகையா கோமகன், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுககர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.