மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருட்தந்தை மேரி பஸ்தியன் நிதியத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இவ் அஞ்சலி நிகழ்வில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்றதுடன் அருட்தந்தை மேரி பஸ்ரியன் நிதியத்தினரினால் வறிய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் கல்வி கொடுப்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பித்து அருட்தந்தையின் நினைவாக ஆலய மண்டபத்தினுள் புதிதாக அமைக்கப்பட்ட நூல் நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.

By admin