மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமையில் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.

பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை சுரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் யூபிலி கதவை ஆசீர்வதித்து யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தது யூபிலி சிலுவையை ஸ்தாபித்துவைத்தார்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட தேர்வு நிலை ஆயர் ஞானப்பிரகாசம், குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை, மேய்ப்புப் பணி செயலர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ, வழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் தவராஜ், மாந்தை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யூட் குருஸ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin