யாழ். மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்திற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழு இயக்குனர்கள் இவ்வருடத்திற்கான செயற்திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து அவை தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றினர்.