கிளிநொச்சி முறிகண்டி திருமறைக்கலாமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கலைத்தூது அறிவக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது.
திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைக்க Canada SQM foundation நிறுவன நிறுவுனர் திரு. கமலநாதன் அவர்கள் கலந்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார்.
கலைத்தூது அறிவகம் இப்பிரதேச பிள்ளைகளின் கலை மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படவுள்ளதுடன் பலவருடங்களாக போதிய பௌதீக வளங்களின்றி அங்கு இயங்கிவந்த இம்மன்றத்தின் கலைச்செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் யாழ். திருமறைக்கலாமன்ற நிர்வாக உத்தியோகத்தர்கள், அங்கத்தவர்கள் மக்களென ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கட்டடம் Canada SQM foundation நிறுவுனர் திரு. கமலநாதன் அவர்களின் அனுசரணையில் ஜீவ ஊற்று அறக்கட்டளை நிறுவனத்தின் கட்டுமானப்பணியில் அமைக்கப்பட்டுள்ளது.