யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர் றொகான் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் குழுச்செயற்பாடுகள், கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றதுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களால் யூபிலி ஆண்டு தொடர்பான கருத்துரையையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கின் பக்திச்சபைகளை சேர்ந்த 60 அங்கத்தவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.