பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அந்தோனிப்பிள்ளை அகஸ்டின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் யூபிலி ஆண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பளை பிரதேச செயலக உளவள உத்தியோகத்தர் செல்வி. பிரியா அவர்கள் கலந்து முதியோர் உளவள ஆரோக்கியம் தொடர்பான கருத்துரை வழங்கினார். தொடர்ந்து முதியோர் மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் அவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ், செயலாளர் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குத்தந்தையர்கள், பங்கு அருட்பணி சபை அங்கத்தவர்கள், முதியயோர்களென 120 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin