யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட போட்டிகளில் முதலிடங்களை பெற்ற 05 குழுக்கள் பங்குபற்றியிருந்தன.
இப்போட்டியில் சுன்னாகம் பங்கு முதலாமிடத்தையும் மணற்காடு பங்கு இரண்டாமிடத்தையும் நாவாந்துறை பங்கு மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

By admin