யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறை தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்கள் கலந்து சிறப்புத் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து சட்டத்தரணிகளுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், நீதிபதிகள், கட்டத்தரணிகள், சட்டத்துறை மாணவர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பு மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமாக செயற்பட்டு சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவை தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றது.

By admin