இலங்கை தேசிய பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை உபதலைவராக யாழ். மறைமாவட்ட பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை தலைவர் சகோதரர் ஜெறி றெனோல்ட் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பிலுள்ள தலைமை காரியாலயத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாக தெரிவின் போதே இவர் உபதலைவராக தெரிவாகியுள்ளார்.
யாழ். மறைமாவட்டத்தில் 90ஆண்டுகளாக பணியாற்றிவரும் பிரான்சிஸ்கன் பொதுநிலை சபையிலிருந்து தேசிய சபைக்கு தமிழர் ஒருவர் தெரிவாகியுள்ளமை இதுவே முதல்முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.