யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை தின நிகழ்வு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருப்பலியை பேராலய உதவி பங்குத்தந்தை அருட்தந்தை நரேஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்துடன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற கலைநிகழ்வில் செபமாலைதாசர் சபையை சேர்ந்த பாடசாலை பழைய மாணவன் அருட்தந்தை செபமாலை ஜெபதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இணுவில் இந்துக்கல்லூரி ஆசிரியையும் பாடசாலை பழைய மாணவியுமான திருமதி. ஜெகநாதன் வினோஜினி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
அரங்க நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் நடனம், கோலாட்டம், குழுப்பாட்டு, பேச்சு, போன்ற கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.