ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை தேவராஜா ரவிராஜ் அவர்கள் கலந்து ‘பரிசோதனைக்குழாய் கருவுருவாக்கம் (IVF) சாதக பாதக விவாதங்களின் தொகுப்பின் பின்னணியில் ஓர் ஒழுக்கவியல் பார்வை’ என்ற தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள் குருமட மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தாதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நினைவுப்பேருரை ஆயர் அவர்களின் ஞாபகமாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் இம்முறை நடைபெற்ற இப்பேருரை 16வது நினைவுப்பேருரை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin