வட மாகாண கல்வி திணைக்களத்தின் உள சமூக வளநிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடமாகாண கல்வித்திணைக்கள உள சமூக நிலைய இணைப்பாளர் திருமதி. விக்டோறியா எல்விஸ் பிறஸ்லி அவர்களின் தலைமையில் தனியார் மேம்பாட்டிற்கான மென்திறன்கள் என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப்பாடசாலை பிரதி அதிபர் திரு. இக்னேசியஸ் கிளனி மற்றும் ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி. புஸ்பலதா தனேஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்தினர்.
இக்கருத்தமர்வில் வடமாகாணத்திற்குட்பட்ட 13 கல்வி வலயங்களை சேர்ந்த 35ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.