யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை றெமோசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை யாவிஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin