தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு தாளையடி – செம்பியன்பற்று பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி திங்கட்கிழமை திருத்தந்தையின் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வுகள் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார், தாளையடி புனித யூதாததேயு, நாகர்கோவில் புனித சவேரியார், குடாரப்பு புனித கார்மேல் அன்னை ஆலயங்களில்
இடம்பெற்றன.
மாணவர்களுக்கான ஒன்றுகூடல், விளையாட்டுக்கள், நோயாளர் தரிசிப்பு, கடற்கரை சுத்தப்படுத்தல், கலைநிகழ்வுகள், முதியோர் தரிசிப்பு, கள அனுபவ சுற்றுலா, மறை அறிவு போட்டிகள் தீப்பாசறை, சந்தை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.