செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழாவும் புதிய பலிப்பீடம் ஆசீர்வதிக்கும் சடங்கும் கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன.

அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய குவிமாடத்தையும் பலிப்பீடத்தையும் ஆசீர்வதித்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் அன்றைய நாளின் சிறப்பு நிகழ்வுகளாக மாலை சென் பிலிப்புநேரிஸ் மற்றும் மருதங்கேணி கணேசாந்தா விளையாட்டு கழகங்களுக்கிடையிலான நட்புரீதியான காற்பந்தாட்ட போட்டியும் இரவு சென் பிலிப்நேரிஸ் கலாமன்றத்தினரால் புனித யோசப்வாஸின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘புனித யோசப்வாஸ்’ நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.

By admin