இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே தேசிய காற்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவு நிகழ்வு கடந்த வாரம் கம்பகா, தம்புள்ள ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் 15 வயதுப்பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலிருந்து பங்குபற்றிய மாணவன் அல்காந்தறா விக்மிலன் அவர்கள் தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.