பரந்தன் பங்கின் புனித வின்சென்ட் டி போல் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட முதியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.