இளையோர்கள் மத்தியில் சமூக நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பூநகரி பங்கில் முன்னெடுக்க்பட்ட
இளையோருக்கான களஅனுபவ பயணம் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 02ஆம் ,3ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பூநகரி பங்கு இளையோர் வலைஞர்மடம் பங்கிற்கு களஅனுபவ பயணம் மேற்கொண்டு அங்குள்ள இளையோருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர்.
கலந்துரையாடல், கருத்துரைகள், அனுபவப் பகிர்வுகள், குழுவிளையாட்டுக்கள் என்பவற்றுடன் வலைஞர்மடம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வலையர்மட இளையோர்களால் தீப்பாசறை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டடிருந்தது.
தொடர்ந்து 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளையோருக்கான சிறப்பு திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றன.