தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி அன்னை சிற்றாலய புனரமைப்புபணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இவ்வைத்தியசாலையில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான புற்று நோயாளிகள் வருகைதந்து சிகிச்சை பெற்றுச்செல்வதுடன் இவர்கள் மத வேறுபாடின்றி இச்சிற்றாலயத்திற்கு சென்று வேண்டுதல் செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.