கட்டைக்காடு பங்கின் நித்தியவெட்டை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திரு இருதய ஆண்டவர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.