யாழ். பொதுநூலகம் சிங்கள காடையர்களால் எரிக்கப்பட்டபோது அதனைப்பார்த்து மாரடைப்பால் மரணமடைந்த அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 01ஆம் திகதி சனிக்கிழமை இன்று தும்பளையில் நடைபெற்றது.
பருத்தித்துறை பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தும்பளை புனித மரியன்னை சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் நிலைய தலைவர் திரு. ஜெயரட்ணம் கட்சன் அனோஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரங்கல் திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தை அவர்களின் உருவச்சிலை திரைநீக்க நிகழ்வும் நடைபெற்றன.
புனித லூர்து அன்னை சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் திருப்பலியை ஒப்புக்கொடுத்து அதன் அருகாமையில் அமைந்துள்ள அருட்தந்தை சிங்கராயர் தாவீது அவர்களின் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட அவருடைய உருவச்சிலையும் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் அடங்கிய கல்வெட்டினையும் திறந்துவைத்தார்.