யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூத்த குருவாகிய அருட்தந்தை S.J இம்மானுவேல் அவர்களின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட குருமுதுல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்அருட்தந்தை S.J இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் அருட்தந்தைக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அவரின் பணிவாழ்வை சித்தரிக்குமுகமாக ‘ECCE HOMO’ அதாவது இதோ மனிதன் என்னும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம். குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம். குருக்கள். அருட்தந்தையின் உறவினர்களென பலரும் கலந்து அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி செபித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/24-1.jpg)