இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 81வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு சம்மேளன இயக்குநர் அருட்தந்தை கலன பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய கத்தோலிக்க இளையோர் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் வழிகாட்டலில் கடந்த 25,26, 27ம் திகதிகளில் கொழும்பு சுபோதி நிலையத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நாளில் நடைபெற்ற கலை நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
மரியாள் எழுந்து விரைவாக நடந்து சென்றார் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்ஒன்றுகூடலில் இலங்கையின் 12 மறைமாவட்டங்களில் இருந்தும் 100ற்கு மேற்பட்ட இளையோர் கலந்துகொண்டனர்.
இந்நகிகழ்வில் யாழ். மறைமாவட்டதிலிருந்து மறைமாவட்ட இளையோர் இயக்குநர் அருட்தந்தை பிறாயன் அவர்களின் வழிகாட்டலில்9 இளையோர் பங்கெடுத்திருந்தார்கள்.