யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட 32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் தெரிவாகிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 46.4 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் 154 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 43.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 05 இலக்குகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 5 இலக்குகளால் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் துடுப்பாட்ட வீரராக புனித பத்திரிசியார் கல்லூரி அணியை சேர்ந்த செல்வன் சியாம்சன் அவர்களும், சிறந்த பந்து வீச்சாளராக புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த இவோன் அவர்களும் சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் செல்வன் விஸ்ணுகோபன் அவர்களும், சிறந்த சகல துறை ஆட்டநாயகனாக புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த செல்வன் மதுசன் அவர்களும் சிறந்த இணைப்பாட்ட வீரர்களாக புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த செல்வன் சியாம்சன் மற்றும் செல்வன் கரன் எட்றியன் ஆகியோரும் அர்ப்பணிப்பான துடுப்பாட்ட வீரர்களாக யாழ்ப்பாணக் கல்லூரியை சேர்ந்த செல்வன் கபிசன் அவர்களும் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த செல்வன் இவோண் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

By admin