Month: April 2025

கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் தவக்கால சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட ஓய்வுநிலை குருக்களுடனான சந்திப்பு கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநரும் சங்க போசகருமான அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை குடும்பநல நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின்…

இரத்ததான நிகழ்வு

தவக்கால சிறப்பு நிகழ்வாக கோப்பாய் புனித மரியன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 51 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

திருகோணமலை மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி மொண்டோபானோ தியான இல்லத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு,…

திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட காத்தான்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…