Month: March 2025

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில்…

திரு அவையில் பல முக்கியமான பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும்

திரு அவையில் பல முக்கியமான பொறுப்பு வாய்ந்த பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும் என கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டொருங்கியக்க மாநாடு நிறைவடைந்து இம்மாநாட்டின் பயனாக வெளிவந்த இறுதி ஆவணத்தின் 77ஆம் இலக்கத்திலேயே பொதுநிலையினரின் பணி வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் திருவையின்…

கச்சதீவு திருவிழாவில் முதல் முறையாக இந்தியா நாட்டிலிருந்து ஓர் ஆயர்

வருகின்ற 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் முதல் முறையாக இந்தியா நாட்டிலிருந்து ஓர் ஆயர் கலந்துகொள்ளவுள்ளதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் அவர்களே இவ்விழாவில் கலந்துகொள்ள…

வதிவிடப்பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறையாசிரியர்களுக்கான ஒரு மாதகால வதிவிடப்பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…