Month: January 2025

யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம்

யாழ். மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்திற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

ஆயருடனான சந்திப்பு

கனடா பாராளுமன்ற உறுப்பினரும் முடிக்குரியோர் மற்றும் பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சருமான திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை…

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய ஆலோசனைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ஆலோசனைக்குழு கூட்டம் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வருடம் குடும்பங்களை மையப்படுத்தி…

கலைத்தூது அறிவக திறப்புவிழா

கிளிநொச்சி முறிகண்டி திருமறைக்கலாமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கலைத்தூது அறிவக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு கடந்த 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டகப்புலம் புனித அமல உற்பவ அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஏற்பாட்டில்…