Month: November 2024

“மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல்

இலங்கை நவீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல் கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அமைந்துள்ள கலம் பண்பாடுகளின் சந்திப்பு வெளியில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பிரச்சினைகளை மையப்படுத்திய…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்கிடையே வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு 09ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 276 பாடசாலைகளில் இடம்பெற்ற இப்பரீட்சையில் 13,000ற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

திருத்தந்தையின் மறைபரப்பு சபை இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான செயற்திட்ட கூட்டம்

திருத்தந்தையின் தேசிய மறைபரப்பு சபையால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வருடாந்த செயற்திட்ட கூட்டம் 08, 09ஆம் திகதிகளில் குருநாகல் கரித்தாஸ் ஜெனசெத்த நிறுவனத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

பாடசாலை தின நிகழ்வு

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை தின நிகழ்வு கடந்த 04ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க…

சிறப்பு திருப்பலி

புனித வின்சென்டி போல் மத்திய சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி 09ஆம் திகதி சனிக்கிழமை இன்று சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. திருப்பலியை குருநகர்…