Month: March 2024

பொற்பதி புனித இராயப்பர் ஆலய சிலுவைப்பாதை யாத்திரை

மணற்காடு பங்கின் குடத்தனை பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இயங்கும் சின்னப்பர் தோழமை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப்பாதை யாத்திரை கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை பொற்பதி புனித இராயப்பர்…

கோப்பாய் புனித மரியன்னை ஆலய இரத்ததான முகாம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக கோப்பாய் புனித மரியன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இம்முகாமில் 14 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம்…

புனித டோமினிக் சாவியோ திருவிழா

பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட புனித டோமினிக் சாவியோ திருவிழா கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும், விளையாட்டுக்களும், மகிழ்வூட்டல் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

குமுழமுனை மற்றும் முழங்காவில் பங்குகளின் தவக்கால பாதயாத்திரை

குமுழமுனை மற்றும் முழங்காவில் பங்குகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை தயதீபன் மற்றும் நிதர்சன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி இரணைமாதாநகர் ஊடாக சிப்பியாறு,…

தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய தவக்கால யாத்திரை

தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றில்…