Month: March 2024

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலய காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர்…

கூழாமுறிப்பு பங்கு உறுதிப்பூசுதல்

கூழாமுறிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 82 மாணவர்கள் உறுதிப்பூசுதல்…

நித்திய அர்ப்பண வார்த்தைப்பாடு

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதர்களுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு சடங்கு மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது. கொழும்புத்தறை புனித மசனட் சிற்றாலயத்தில் மாகாண முதல்வர் தலைமையில் நடைபெற்ற…

கிளிநொச்சி பங்கில் காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை பாதயாத்திரை

கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை பாதயாத்திரை 22ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானம் கிளிநொச்சி தொண்டமாநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில்…

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை

சைவசமய மக்களின் புனித நாளாகிய சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்த பூசகர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வழிபாடுகளுக்கு வந்திருந்து பொதுமக்களுக்கு எதிராக இலங்கை பொலீஸாரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை கண்டித்து கண்டனப் போராட்டங்கள் பல இடங்களிலும்…