Month: November 2023

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரிக்கு புதிய முதல்வர்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் புதிய முதல்வராக அருட்சகோதரி மரீனா சகாயம் அவர்கள் 1ஆம் திகதி கடந்த புதன்கிழமை பணிப்பொறுப்பேற்றுள்ளார். யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர்சபை தலைமைத்துவ குழுவின் ஆலோசகர் அருட்சகோதரி அன்ரனிற்ரா மார்க் அவர்களின் முன்னிலையில் அருட்சகோதரி அவர்கள் தனது…

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஜப்பசி மாத திருவிழா

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஜப்பசி மாத திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து வவுனியா இறம்பைக்குளம் சேமக்காலையில் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலியை அருட்தந்தை அந்தோணிதாஸ் டலிமா அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் கல்லறைகள் ஆசீர்வதிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து…

இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய சேமக்காலையில் 2ம் திகதி கடந்த வியாழக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி நிறைவேற்றினார். திருப்பலி நிறைவில் கல்லறைகள் ஆசீர்வதிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

செபமாலைக் கன்னியர் ஆழ்நிலை தியான துறவற சபையினரின் மேல்மட்ட கூட்டத்தொடர்

மரியன்னையை மாதிரியாகக் கொண்ட வாழ்வே செபமாலைக் கன்னியர்களின் அழைப்பு என செபமாலைக் கன்னியர் ஆழ்நிலை தியான துறவற சபையினரின் மேல்மட்ட கூட்டத்தொடரில் கலந்து கொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தெரிவித்துள்ளார். அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை…