Month: November 2023

சுழற்சி முறை வாழ்வாதார கடனுதவி வழங்கல்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கௌதாரிமுனை கிராம மக்களுக்கான சுழற்சி முறை வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில்…

சில்லாலை பங்கு இளையோர் ஒன்றுகூடல்

சில்லாலை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை மாதா ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும்…

கள அனுபவ சுற்றுலா செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் திருகோணமலை பிரதேசத்தை…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய செபமாலை பேரணி

செபமாலை மாதத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இப்பேரணி செம்பியன்பற்று கடற்கரை வீதியிலுள்ள மடு அன்னை திருச்சொருபத்தின் முன்பாக ஆரம்பமாகி…

மட்டக்களப்பு நான்காம் கொலனி சின்னமடுமாதா ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான நான்காம் கொலனி சின்னமடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலயத்தில்…