ff1

யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமது புத்தாண்டு செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
என்றுமில்லாதவாறு இலங்கை மண்ணில் நல்லெண்ண அரசு ஒன்று தோண்றி இன, மத, அரசியல் நல்லிணக்கம் உருவாகியிருக்கின்ற இவ்வேளை நீதியோடு கூடிய ஒரு நிரந்தர தீர்விணை யாப்பின் வழி அமைத்துக்கொள்ள மிகச்சிறந்த நேரமாகும் எனத் தெரிவித்த அவர், இந்த நேரத்தை சிறந்த விதமாக இராஜதந்திர ரீதியாகப் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டியது எமது பணியாகும். – என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தமிழ் அரசியற் தலைவர்களும் பத்திஜீவிகளும் இதற்காக அரும்பாடுபட்டு உழகை;கவேண்டும். குறிப்பாக அரசியற் தலைவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைத் துறந்து – அரசியல் மற்றும் கட்சி எண்ணங்களை கடந்து – ஒட்டு மொத்தமாக இணைந்து, அரும்பாடுபட்டு உழகை;க வேண்டுமென தமிழ் மக்கள் பெயரால் வேண்டுகிறோம் – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலர்ந்துள்ள 2017ஆவது புதிய ஆண்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் இறையாசீர் நிறைந்த மகிழ்வான ஆண்டாக, நீதியோடு கூடிய நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரும் ஆண்டுhகட்டும். இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

By admin