இலங்கை திருஅவையில் பணியாற்றி தமது 175 ஆண்டுகளை நிறைவு செய்யும் அமலமரித் தியாகிகள் சபையினர் இவ்வாண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளை முன்னெடுத்துள் நிலையில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் 14ம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்இ கொழும்புதுறையில் நடைபெற்றது.
கொழும்புதுறை புனித யூஜின் டி மசனெட் சிற்றாலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் சிறப்புத்திருப்பலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன. ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் மன்னார்இ திருகோணமலைஇ மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்களோடும் யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் முதல்வர்இ கொழும்பு மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் முதல்வர்இ மற்றும் குருமுதல்வர்கள்இ ஏனைய துறவற சபையின் முதல்வர்கள் குருக்கள்இ துறவிகள்இ பொது நிலை பணியாளர்களும் இணைந்து செபித்தனர். திருப்பலியை தொடர்ந்து கலைநிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன. இலங்கையில் பணியாற்றிவரும் அமலமரித்தியாகிகள் யாழ்ப்பாணம்இ கொழும்பு என இருமாகாணங்களாக இயங்கி நாட்டின் பலபாகங்களிலும் ஆன்மீகப்பணிகள்இ கல்விப்பணிகள்இ இரக்கப்பணிகள் மற்றும் மனித நேயப்பணிகள் ஆற்றிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.