யாழ். புனித பரியோவான் கல்லூரியின் ஏற்பாட்டில் 15வது அமலசீலன் ஞாபகார்த்த 11 வயதிற்குட்பட்ட அழைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே உதைபந்தாட்ட ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் 5 பாடசாலைகளை சேர்ந்த 7 அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் A,B இரு அணிகள் பங்குபற்றியிருந்தன.
புனித பத்திரிசியார் கல்லூரி A அணி புனித பரியோவான் கல்லூரி A அணியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியை 03 : 00 என்ற கோல் கணக்கிலும் வெற்றியீட்டியதுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியுடன் கோல் எதனையும் பெறாது சமநிலையடைந்தது.
புனித பத்திரிசியார் கல்லூரி B அணிக்கும் புனித பரியோவான் கல்லூரி B அணிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைய கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தை 01 : 00 என்ற கோல் கணக்கில் புனித பத்திரிசியார் கல்லூரி B அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து இவ்வாண்டு முதல் ஒவ்வொரு அணியில் இருந்தும் சிறந்த உதைபந்தாட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட நிலையில், புனித பத்திரிசியார் கல்லூரி A அணியின் சிறந்த வீரராக கவியாழன் அவர்களும் B அணியின் சிறந்த வீரராக ரோகித் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.