கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்தெரிவும் பொதுநிலையினர் கழக யாப்பு மற்றும் பொதுநிலையினர் திருத்தூது பணிகள் பற்றிய விளக்க உரையும் இடம்பெற்றது.
யாழ்.மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் ஆகியோர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.