கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் நான்காம் வருட இறையியல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 05ஆம் திகதி தெடக்கம் 12ஆம் திகதி வரை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன.
சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர்கள் விவிலியம் சார்ந்த களஅனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் இல்லத்தரிசிப்புக்கள், விவிலிய பகிர்வுகள், பேரணி, கண்காட்சி என்பன இடம்பெற்றன.