திருகோணமலை மறைமாவட்ட ஓய்வுநிலை குருக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுவந்த வியான்னி இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்இல்ல திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து புதிய இல்லத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
தொடர்ந்து இல்ல சிற்றாலயத்தில் நற்கருணை வழிபாடு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.
இக்கட்டடத்திற்கான நிதியுதவியை கனடா ரொறன்டோ உயர்மறைமாவட்டம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.