கரித்தாஸ் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வு 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் அவர்களின் தலைமையில்; “நாமும் சாதனையாளர்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விசேட தேவையுடையோர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து உற்பத்திபொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் 60வரையான விசேடதேவையுடையோருடன் 300வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin