விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும், கலைநிகழ்வும் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ஸ்ரெலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.