யாழ். மறைக்கல்வி நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.
மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வுகள் யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடம், சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பருத்தித்துறை புனித தோமையார் ஆலயம், முழங்காவில் மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இச்செயலமர்வுகளில் 550 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.