வலய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில நாடகப் போட்டி 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.
ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான நாடகப்போட்டியில் புனித ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை முதலாம் இடத்தையும் புனித பத்திரிசியார் கல்லூரி இரண்டாம் இடத்தையும் நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் றோமன் கத்தோலிக்க பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
போட்டியை தொடர்ந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

