யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த வருடாந்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
சகோதர பாடசாலைகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அதிபர் அருட்சபோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், கரோல் கீதங்கள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
யாழ். பல்கலைக்கழக வரவு விரிவுரையாளர் அருட்தந்தை அன்ரனி ஜீவேந்திரா போல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.